மரண தண்டனை கைதியிடம் நவீன கையடக்கத் தொலைபேசி
பூஸ்ஸ சிறைச்சாலையில் நேற்று (10) மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது தெமட்டகொட சமிந்த எனப்படும் கைதி தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறையிலிருந்து நவீன கையடக்கத் தொலைபேசி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள தெமட்டகொட சமிந்தவின் சிறை அறையினுள் சோதனை அதிகாரிகள் சோதனை செய்ய முயற்சிக்கும் சந்தரப்பத்தில், குறித்த கைதி தொலைபேசியை தரையில் அடித்து அழிக்க முயன்றதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காவல்துறை விசேட அதிரடிப்படை, பூஸ்ஸ சிறைச்சாலையின் அதிகாரிகள், சிறைச்சாலை அவசர நடவடிக்கை பிரிவு மற்றும் பூஸ்ஸ சிறைச்சாலை அதிகாரிகள் ஆகியோர் இணைந்து இந்த சோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

Post a Comment