இலங்கைக்கு எவ்விதமான பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை - அமைச்சர் ஆனந்த விஜேபால
இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் அண்மையில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து, இலங்கைக்கு எவ்விதமான பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை என்று அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதியளித்துள்ளார்.
"தற்போது, அத்தகைய அச்சுறுத்தல் குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை. எமது பாதுகாப்புப் படைகள் தேசியப் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்துகின்றன. எனவே, தேசியப் பாதுகாப்பு குறித்து எந்தப் பிரச்சினையும் இல்லை," என்று அமைச்சர் கூறினார்.

Post a Comment