மீன் பொரியலுக்குள் புழுக்கள்
முல்லைத்தீவு, உடையார்கட்டு பகுதியில்உணவகமொன்றில் நபரொருவர் மதிய உணவுக்காக 5 பார்சல் உணவுகளை வாங்கி சென்றுள்ளார். பின்னர் உணவை அவிழ்த்து சாப்பிடும் போது, மீன் பொரியலுக்குள் புழுக்கள் இருப்பது தெரியவந்தது.
அதிர்ச்சியடைந்த அவர் சம்பவம் தொடர்பாக உடனடியாக சுகாதார பரிசோதகருக்கு தகவல் வழங்கியுள்ளார். சம்பவ இடத்துக்குச் சென்ற சுகாதார அதிகாரிகள் உணவகத்தை பரிசோதித்து, சுகாதார விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதைக் கண்டறிந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, குறித்த உணவகம் மீது சுகாதார பிரிவினரால் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Post a Comment