Header Ads



இஸ்ரேலிய சுற்றுலா பயணிகள், தாஜூதீனின் கொலை, ஈஸ்டர் தாக்குதல் பற்றி ஜனாதிபதி கூறியவை


⭕️இஸ்ரேலிய சுற்றுலா பயணிகள் பற்றி பாராளுமன்றத்திலும் கூச்சலிடுகிறார்கள். இலங்கைக்கு வரும் சுற்றுலா  பயணிகளை பாதுகாக்க  வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு. எதிர்க்கட்சியினர் புதுமையானவர்களாக உள்ளார்கள். 


⭕️ தாஜூதீனின் படுகொலை தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொண்டுள்ளோம். பாதுகாப்பு தரப்புடன் தொடர்புடைய அதிகாரிகள் விசாரிக்கப்படவுள்ளார்கள். இது படுகொலை என்பதை விசாரணை அதிகாரிகள் அண்மையில் எனக்கு உறுதிப்படுத்தினார்கள். இதற்கு நீதியை பெற்றுக்கொடுக்க கூடாதா,  குற்றவாளிகளை தண்டிக்கும் போது இராணுவ பழிவாங்கல் என்று குறிப்பிடாதீர்கள்.


⭕️ உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் பற்றியும் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்படுகிறது. விசாரணைகளை மேற்கொள்ளும் போது நீதிமன்றத்தை நாடாமல் ஏன் குற்றச்சாட்டுக்களை மாத்திரம் முன்வைக்கின்றீர்கள்.  குண்டுத்தாக்குதல்கள் குறித்து பல கோணத்தில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகிறது. இன்று நீதியை கோருகின்றவர்கள் அன்று எதனையும் செய்யவில்லை. 2019 ஆம் ஆண்டு ஆட்சிமாற்றத்தின் பின்னர்  பல சாட்சியங்கள் அழிக்கப்பட்டுள்ளன.


⭕️ செம்மணி மனித புதைகுழி தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொண்டுள்ளோம். ஆணைக்குழு அமைத்து உண்மையை மூடி மறைக்கவில்லை. உண்மையை கண்டறியும்  அவசியம் எமக்கு உண்டு. விடுதலை புலிகள் காலத்தில் கண்டுப்பிடிக்க தங்க நகைகளை  உரிமையாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இருப்பினும் அது இயலாமல் உள்ளது. அந்த நகைகளை பணமாக மாற்றி வடக்கு மாகாண அபிவிருத்திக்கு பயன்படுத்த தீர்மானித்துள்ளோம் 

பாராளுமுன்றத்தில் 18-11-2025 அன்று உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.