Header Ads



இலங்கையுடனான ராஜதந்திர உறவுகளுக்காக, நினைவு முத்திரைகளை வெளியிட்ட சவுதி சவுதி அரேபியா


இலங்கை - சவுதி அரேபியா  இடையிலான இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டதன் 50 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், சவுதி தபால் துறை வெளியிட்ட நினைவு முத்திரைகளை சவுதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சரிடமிருந்து இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் இன்று (09) பெற்றுக் கொண்டார்.


இது இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் ஒரு வரலாற்று தருணத்தைக் இதுகுறிக்கிறது.


இரண்டு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களாக, நமது வரலாற்று மற்றும் நீடித்த இருதரப்பு உறவுகளை புதிய உயரங்களுக்கு உயர்த்துவதற்கான எங்கள் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை நாங்கள் வெளிப்படுத்தினோம் என விஜித்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.