Header Ads



வங்கி அட்டைகள் மூலம் பஸ் கட்டணம்


வங்கி அட்டைகள் மூலம் பஸ் கட்டணம் செலுத்தும் நடைமுறை எதிர்வரும் திங்கட்கிழமை (24) முதல் ஆரம்பமாகவுள்ளது.


முதல் கட்டத்தின் கீழ் மாகாணங்களுக்கு இடையேயான 03 மார்க்கங்கள் உள்ளிட்ட சுமார் 20 மார்க்கங்களில் வங்கி அட்டைகள் மூலம் பஸ் கட்டணங்களை செலுத்தும் நடைமுறையை செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது


காலி, மாத்தறை மற்றும் பதுளை வரையிலான பஸ்களில் வங்கி அட்டைகள் மூலம் பஸ் கட்டணங்களை செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



பயணிகளுக்கு மிகுதிப்பணம் வழங்குவதில் காணப்படும் சிக்கலுக்கு தீர்வு வழங்குதல் மற்றும் பஸ் உரிமையாளர்களுக்கு கிடைக்கும் வருமானத்தை சரியாக கணக்கிடுதல் ஆகிய வசதிகள் இதனூடாக கிடைக்கவுள்ளது.

No comments

Powered by Blogger.