விற்பனை நிலையம் மீது சரிந்து விழுந்த மண்மேடு
பஹல கடுகன்னாவ பகுதியில் இன்று (22) முற்பகல் ஏற்பட்ட அதிக மழை காரணமாக, ஒரு விற்பனை நிலையம் மீது மண்மேடு சரிந்து விழுந்துள்ளது.
இந்த அனர்த்தத்தில், அந்த விற்பனை நிலையத்தில் இருந்த ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், 4 பேர் காயமடைந்து மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் சில நபர்கள் இந்த இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களை மீட்கும் நடவடிக்கையை அனர்த்த முகாமைத்துவ நிலையம் தற்போது ஆரம்பித்துள்ளது.

Post a Comment