Header Ads



ஜனாதிபதியின் சில முக்கிய அறிவுறுத்தல்கள்


நிதியை செலவிடுவதில் சுற்றறிக்கைகள் தடையாக இருப்பதைத் தடுக்க உடனடியாக ஒரு புதிய சுற்றறிக்கையை வெளியிடுமாறும், இடம்பெயர்ந்த மக்களுக்காக பராமரிக்கப்படும் முகாம்களின் நிர்வாகப் பொறுப்பை இராணுவத்திடம் ஒப்படைக்குமாறும் ஜனாதிபதி அநுரகுமார  அறிவுறுத்தியுள்ளார்.


அனர்த்த நிவாரணங்களுக்காக தற்போது 1.2 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன், 2025 வரவுசெலவுத் திட்டத்தில் மேலும் 30 பில்லியன் ரூபா அவசரத் தேவைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதால், நிதியை தடையாகக் கொள்ளாமல் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட செயலாளர்களுக்கு குறிப்பிட்டுள்ளார்


 மக்களின் மீட்புப் பணிகள் மற்றும் அவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு மேலதிக நிதி தேவைப்பட்டால் கேட்குமாறும், அவசர நிலமைகளில் தற்போது மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களிடன் உள்ள நிதியைப் பயன்படுத்துமாறும்  அறிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.