Header Ads



பாகிஸ்தானுடன் போட்டியை தொடர பணிப்பு - நாடு திரும்பினால் நடவடிக்கை


திட்டமிட்டவாறு பாகிஸ்தானுடனான கிரி்க்கெட் தொடரை நிறைவு செய்யுமாறு இலங்கை குழாமுக்கு ஶ்ரீ லங்கா கிரிக்கெட் பணிப்புரை விடுத்துள்ளது. 


வீரர்கள் மற்றும் பணிக்குழாமின் பாதுகாப்பை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை உறுதி செய்துள்ளதாக அறிவித்துள்ள நிலையில், இந்த தொடரை வெற்றிகரமாக நிறைவு செய்யுமாறு ஶ்ரீ லங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது 


ஶ்ரீ லங்கா கிரிக்கெட்டின் இந்த பணிப்புரையை மீறி, நாடு திரும்பும் எந்தவொரு வீரர், பணிக்குழாமின் உறுப்பினர்களுக்கு எதிராகவும் ஒழுக்காற்று விசாரணை முன்னெடுக்கப்படும் மற்றும் அவர்களது ஒப்பந்தம் மீள் பரிசீலனைக்கு உட்படுத்தப்படும் என ஶ்ரீ லங்கா கிரிக்கெட் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments

Powered by Blogger.