Header Ads



25 இலட்சம் முஸ்லிம்களின் உரிமையை, பாதுகாக்க குர்ஆன் பிரதிகளை விடுவியுங்கள்




25 இலட்சம் முஸ்லிம்களின் சமய உரிமையை பாதுகாக்கும் வகையில், சுங்கத்தில் வைக்கப்பட்டுள்ள குர்ஆன் பிரதிகள் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட மீளாய்வு குழுவின் பரிந்துரைகளை நிராகரித்துவிட்டு,  குர்ஆன் பிரதிகளை விடுவிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும். 


எமது புனித அல் குர்ஆன் பிரதிகளை இறக்குமதி செய்வதில் இந்த அரசாங்கம் கழி யுகத்திலே இன்னும் இருந்து வருகிறது. QR கோடை பயன்படுத்தி, கையடக்க தொலைபேசியில் அல் குர்ஆன் மொழிபெயர்ப்புகளை தரவிறக்கம் செய்து பார்க்கலாம்.


ஆனால், சவூதி நாட்டில் இருந்து வந்த அல்குர் பிரதிகள் விடுவிக்கப்படாமல் சுங்கத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றன. நாங்கள் இன்று டிஜிட்டல் துறை தொடர்பில் கதைத்துக் கொண்டிருக்கிறோம். தமிழ் மொழிபெயர்ப்பு குர் ஆனை இறக்குமதி செய்ய கடந்த கால அரசாங்கம் எடுத்த தீர்மானத்தை, இந்த அரசாங்கம் செயற்படுத்த வேண்டுமா..? இதன் மூலம் ஒரு சமயத்தின் அடிப்படை உரிமை மீறப்படுகிறது.


கடந்த அரசாங்கம் இதனை தடை செய்ததை அடிப்படையாகக்கொண்டு இந்த அரசாங்கம் அவ்வாறு செயற்பட தேவையில்லை. அதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி, இந்த குர்ஆன் பிரதிகளை விரைவாக விடுவிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும். 


(பாராளுமன்றத்தில் 12.11.2025 அன்று மஸ்தான் Mp தெரிவிப்பு)

No comments

Powered by Blogger.