Header Ads



இனவாத, வெறுப்புகளுக்கு இடமளிக்க முடியாது - பௌத்த துறவிகளுக்கு என பிறிதொரு சட்டம் கிடையாது



இனவாதம் மற்றும் வெறுப்பு பேச்சுகளுக்கு இடமளிக்க முடியாது. வடக்கு , தெற்கு, கிழக்கு என்று வேறுபாடின்றி அனைத்து இன மக்களையும் நாங்கள் ஒருமித்தே பார்க்கிறோம். அனைவரும் சமமாக நடத்தப்படுவார்கள். 


திருகோணமலை  புத்தர் சிலை விவகாரம் குறித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நாட்டில் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு  பிறிதொரு சட்டம் கிடையாது. அதேபோல் பௌத்த துறவிகளுக்கு என்றும் பிறிதொரு  சட்டம் கிடையாது. அனைவரும் பொது சட்டத்துக்கு கட்டுப்பட வேண்டும்.


பாராளுமன்றத்தில்  திங்கட்கிழமை (17) நடைபெற்ற  வரவு செலவுத் திட்ட விவாதத்தில் உரையாற்றிய  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் Mp, திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்  தொடர்பில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில்  அமைச்சர்  ஹர்ஷன நாணயக்கார மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.