Header Ads



அவசரமாக இரத்தம் தேவை


நாட்டில் தற்போது நீடிக்கும் அனர்த்த நிலைமை காரணமாக, அவசர தேவைகளுக்கான இரத்தத்தைச் சேகரிப்பதில் பாரிய சிக்கல்கள் எழுந்துள்ளதாக தேசிய இரத்தப் பரிமாற்றல்  நிலைய பணிப்பாளர் Dr லக்ஸ்மன் எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.


"வழமையாக எமக்கு நாளாந்தம் சுமார் 1,500 அலகுகள் இரத்தம் தேவைப்படுகிறது. ஆனால், தற்போதைய அனர்த்த நிலைமையால் நடமாடும் இரத்ததான முகாம்களை எம்மால் நடத்த முடியவில்லை.


இதனால், அத்தியாவசியமான இரத்தத்தின் அளவை எம்மால் சாதாரணமாகச் சேகரிக்க முடியவில்லை. இந்த நிலைமை நீடித்தால், இரத்தத்தின் கையிருப்பு குறைந்து, தேவைப் பூர்த்தி செய்வதில் பாரிய நெருக்கடி ஏற்படும் அபாயம் உள்ளது.


இதனைக் கருத்தில் கொண்டு, தேசிய ரீதியில் தேவையை நிவர்த்தி செய்ய, நாடு முழுவதும் உள்ள சில முக்கிய இரத்த வங்கிகள் திறக்கப்பட்டுள்ளன. தகுதிவாய்ந்த பொதுமக்கள் அனைவரும் உடனடியாக முன்வந்து, இரத்த தானம் செய்து இந்த தேசிய நெருக்கடியைத் தீர்க்க உதவுமாறு வைத்தியர் லக்ஸ்மன் எதிரிசிங்க அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments

Powered by Blogger.