Header Ads



சர்ச்சை குறித்து, ஹக்கீம் விளக்கம்


சகோதர மொழி மூல யூடியுபர் (You Tuber )ஒருவர் எழுப்பிய சர்ச்சை குறித்து தமிழ் மொழி மூல யூடியுபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அளிக்கப்பட்டுள்ள விளக்கம்


கேள்வி(யூடியுபர்): முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களே, காழ்ப்புணர்வுடன் ஒரு காணொளியைக் காணக்கிடைத்தது.அதாவது, பாராளுமன்ற உறுப்பினர்கள், அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மாவட்டங்களுக்கு தரை மார்க்கமாக செல்ல முடியாத நிலை காணப்படுவதனால் வான் மார்க்கமாக அல்லது வேறு வழிகளில்தான் செல்ல வேண்டியுள்ளது.

உங்களது பெயரைப் பயன்படுத்தி ஒரு சகோதர மொழியில் நீங்கள் நடந்து செல்ல விருப்பம் இல்லாமல், வானூர்தி மூலம் செல்வதற்கு ஆசைப்பட்டு விண்ணப்பித்தது போன்ற ஒரு தகவல் கசிந்து கொண்டிருக்கின்றது. இது பற்றி விளக்குவீர்களா?


பதில் -ரவூப் ஹக்கீம் எம்.பி:

பிரஸ்தாப யூடியுபர் வழமையாக என்.பீ.பீ அரசாங்கத்துக்குச் சார்பாக கருத்துச் சொல்லி வருபவர்.அவர் ஒரு புரளியைக் கிளப்பியிருக்கிறார் .


அவசரமாக பாராளுமன்றத்தை கூட்டி அதன் பிறகு இராணுவ தலைமையகத்தில் கட்சி தலைவர்களோடு, ஜனாதிபதி ஒரு அவசர கலைந்துரையாடலை நடத்தினர். இந்த அவசர நிலை காரணமாக என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்வது, எதிர் கட்சிகளின் ஆதரவை எவ்வாறு பெற்று கொள்வது என்பன பற்றி கலந்துரையாடினோம்.


நான் கண்டி மாவட்டத்தையும், எங்கள் கட்சியின் ஏனைய  உறுப்பினர்கள் நால்வரும் கிழக்கு மாகாணத்தையும் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்துகின்றவர்களாக இருக்கின்ற காரணத்தினால் இலங்கை விமான படையின்  வானூர்திகள் ஊடாக எங்களின் பிரதேசங்களுக்கு செல்வதற்கு வசதிகள் கிடைக்குமா என் நான் நேரடியாக ஜனாதிபதியிடம் வினவிய போது ,அவர் விமான படை தளபதியிடம் இதற்கு உதவி செய்யுமாறு சொன்னார்.


 ஜனாதிபதி இதற்கு சாதகமாக பதில் அளித்த நிலையில்தான் ஒருவர் இவ்வாறானதொரு தவறான செய்தியைப் பரப்புகிறார்.


இதற்கு முன்பும், ரணில் விக்கிரமசிங்கவின் கைது நடக்க போகின்றது என்பதை முன்கூட்டியே ஊடகத்தில்சொல்லியிருந்த வர்தான் இவர்.


எனவே அரசாங்கத்தின் உள் விவகாரங்களை முன்கூட்டியே தெரிந்து வைத்து கொண்டு, அவர்கள் ஊடாக செய்கின்ற பரப்புரைகளுக்கு அமைவாக தன்னுடைய கருத்துக்களைசொல்லுகின்ற ஒருவராக அவர்  இருக்கின்றார் என்பது கவலைக்குரிய விடயம். 


இருந்தாலும்  எங்களுடைய பிரதேசங்களுக்கு போவதற்குரிய இடர்பாடுகள் காரணமாக உத்தியோக பூர்வமாக நாங்கள் விடுத்த வேண்டுகோளை ஜனாதிபதி சாதகமாகப் பரீசீலிப்பதாக சொல்லியிருந்த ஒரு சூழலில், இதை இவ்வாறு திரிபு படுத்தி அவர் தன்னுடைய ஒரு பக்க கருத்தை வெளியிட்டி ருக்கிறார்.  நாங்கள் எப்படியாவது தரைமார்க்கமாக எங்கள் பிரதேசங்களுக்கு செல்வதற்குத் தயாராகிக் கொண்டிருந்தோம்.


எங்கள் பிரதேசங்களுக்கு சென்று எங்களால் முடியுமான உதவிகளை செய்ய ஆயத்தமாகிக் கொண்டிருந்தோம். செய்திப் பரிமாற்றங்களைச் செய்வதற்கு சிரமமாக இருக்கின்றது. எவ்வாறாயினும், இந்த பிரதேசங்களுக்கான அனர்த்த நிவாரண பணிகளைச் செய்வதற்கான முயற்சிகளில் நாங்கள் ஈடுபட்டுக் கொணடிருக்கின்றோம் .

No comments

Powered by Blogger.