அல்லாஹ் உங்களை தேர்ந்தெடுத்துள்ளான்...
அதன் நாணய மதிப்பு பெருமளவில் வீழ்ச்சியடைந்து, பணவீக்கம் அதிகரித்துள்ளது.
எண்ணெய் ஏற்றுமதி முடங்கியுள்ளது. அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கும் நிதிப் பற்றாக்குறை நிலவுகிறது.
உணவுப் பொருட்களின் விலை வானுயர உயர்ந்து, உணவு கிடைக்காமல் பலர் தவிக்கின்றனர். 80% பேர் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்றனர்.
சரி.. இப்போது எதற்காக இந்தச் செய்தி என்கிறீர்களா..? இத்தனை பிரச்சினைகள் இருந்த பின்னரும்...
யேமன் நாட்டின் மஃரிப் மாகாணத்தில் அல்குர்ஆனை முழுமையாக மனப்பாடம் செய்த 218 மாணவர்களை கண்ணியப்படுத்தும் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. அந்தப் புகைப்படம்தான் இது.
இந்தக் காட்சி ஒரு தற்காலிக கொண்டாட்டமோ, சாதாரண நிகழ்வோ அல்ல. மாறாக யேமனில் இன்னும் நன்மை செழித்து வளர்கிறது என்பதைக் குறிக்கும் புகைப்படம் இது!
எவ்வளவுதான் பிரச்சினைகள் இருந்தாலும் அங்கே குர்ஆனிய ஒளி அணையாமல் பாதுகாக்கப்படுகிறது என்பதைக் காட்டும் புகைப்படம் இது!
அதன் வழிகாட்டுதல் இருக்கும் வரை பூமியில் நேர்வழியின் விளக்கு ஒருபோதும் அணையாது என்பதைக் காட்டும் புகைப்படம் இது!
யேமன் மக்களே! மஃரிப் மக்களே! பூமியில் குர்ஆனின் குரலாக இருக்க அல்லாஹ் உங்களை தேர்ந்தெடுத்துள்ளான். அவன் உங்கள் மீது பேரருள் புரிவானாக!
குர்ஆனை மனப்பாடம் செய்தவர்கள்தான் எவ்வளவு பாக்கியவான்கள்!
அதை மனப்பாடம் செய்ய வைத்து, அதன் போதனைகளில் தங்கள் குழந்தைகளை வார்த்தெடுக்கும் பெற்றோர்கள்தான் எவ்வளவு பாக்கியவான்கள்!!
அதன் வசனங்களை ஒளியாகவும், குழந்தைகளை மனிதர்களகவும் மாற்றுவதற்கு தங்கள் நேரத்தை அர்ப்பணிக்கும் ஆசிரியர்கள்தான் எவ்வளவு பாக்கியவான்கள்!!!
குர்ஆனை மனப்பாடம் செய்பவர் அதன் வசனங்களை பாதுகாக்கிறார். அதன் மூலம் அவர் குர்ஆனையே பாதுகாக்கிறார். எவ்வளவு பெரிய பாக்கியம் இது!
யா அல்லாஹ்..! யேமன் மக்களை பாதுகாப்பாயாக! மஃரிப் மக்களைப் பாதுகாப்பாயாக!
யேமன் நாடு தற்போது உலகின் மோசமான மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொள்கிறது. பல ஆண்டுகளாக நீடிக்கும் உள்நாட்டுப் போர், அதன் பொருளாதாரத்தை முற்றிலும் சிதைத்துள்ளது.
அதன் நாணய மதிப்பு பெருமளவில் வீழ்ச்சியடைந்து, பணவீக்கம் அதிகரித்துள்ளது.
எண்ணெய் ஏற்றுமதி முடங்கியுள்ளது. அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கும் நிதிப் பற்றாக்குறை நிலவுகிறது.
உணவுப் பொருட்களின் விலை வானுயர உயர்ந்து, உணவு கிடைக்காமல் பலர் தவிக்கின்றனர். 80% பேர் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்றனர்.
சரி.. இப்போது எதற்காக இந்தச் செய்தி என்கிறீர்களா..? இத்தனை பிரச்சினைகள் இருந்த பின்னரும்...
யேமன் நாட்டின் மஃரிப் மாகாணத்தில் அல்குர்ஆனை முழுமையாக மனப்பாடம் செய்த 218 மாணவர்களை கண்ணியப்படுத்தும் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. அந்தப் புகைப்படம்தான் இது.
இந்தக் காட்சி ஒரு தற்காலிக கொண்டாட்டமோ, சாதாரண நிகழ்வோ அல்ல. மாறாக யேமனில் இன்னும் நன்மை செழித்து வளர்கிறது என்பதைக் குறிக்கும் புகைப்படம் இது!
எவ்வளவுதான் பிரச்சினைகள் இருந்தாலும் அங்கே குர்ஆனிய ஒளி அணையாமல் பாதுகாக்கப்படுகிறது என்பதைக் காட்டும் புகைப்படம் இது!
அதன் வழிகாட்டுதல் இருக்கும் வரை பூமியில் நேர்வழியின் விளக்கு ஒருபோதும் அணையாது என்பதைக் காட்டும் புகைப்படம் இது!
யேமன் மக்களே! மஃரிப் மக்களே! பூமியில் குர்ஆனின் குரலாக இருக்க அல்லாஹ் உங்களை தேர்ந்தெடுத்துள்ளான். அவன் உங்கள் மீது பேரருள் புரிவானாக!
குர்ஆனை மனப்பாடம் செய்தவர்கள்தான் எவ்வளவு பாக்கியவான்கள்!
அதை மனப்பாடம் செய்ய வைத்து, அதன் போதனைகளில் தங்கள் குழந்தைகளை வார்த்தெடுக்கும் பெற்றோர்கள்தான் எவ்வளவு பாக்கியவான்கள்!!
அதன் வசனங்களை ஒளியாகவும், குழந்தைகளை மனிதர்களகவும் மாற்றுவதற்கு தங்கள் நேரத்தை அர்ப்பணிக்கும் ஆசிரியர்கள்தான் எவ்வளவு பாக்கியவான்கள்!!!
குர்ஆனை மனப்பாடம் செய்பவர் அதன் வசனங்களை பாதுகாக்கிறார். அதன் மூலம் அவர் குர்ஆனையே பாதுகாக்கிறார். எவ்வளவு பெரிய பாக்கியம் இது!
யா அல்லாஹ்..! யேமன் மக்களை பாதுகாப்பாயாக! மஃரிப் மக்களைப் பாதுகாப்பாயாக!
மனித குலத்திற்கு இறைவன் அருளிய இறுதி வார்த்தைகளைக் கொண்ட ஒரு தெய்வீக ஆவணம் முஸ்லிம்களாகிய நம்மிடம் மட்டுமே உள்ளது என்பது எவ்வளவு பெரிய நற்பேறு! அதை சுமந்திருப்பவர்கள் எவ்வளவு நற்பேறு பெற்றவர்கள்!
யா அல்லாஹ்..! அன்றாடம் அல்குர்ஆனை ஓதவும், அதன்படி செயல்படவும், அதன் போதனைகளால் எங்களை அலங்கரிக்கவும், அதன்பால் மக்களை அழைக்கவும் எங்களுக்கு நீர் அருள் புரிவாயாக!
✍️ நூஹ் மஹ்ழரிமனித குலத்திற்கு இறைவன் அருளிய இறுதி வார்த்தைகளைக் கொண்ட ஒரு தெய்வீக ஆவணம் முஸ்லிம்களாகிய நம்மிடம் மட்டுமே உள்ளது என்பது எவ்வளவு பெரிய நற்பேறு! அதை சுமந்திருப்பவர்கள் எவ்வளவு நற்பேறு பெற்றவர்கள்!
யா அல்லாஹ்..! அன்றாடம் அல்குர்ஆனை ஓதவும், அதன்படி செயல்படவும், அதன் போதனைகளால் எங்களை அலங்கரிக்கவும், அதன்பால் மக்களை அழைக்கவும் எங்களுக்கு நீர் அருள் புரிவாயாக!
✍️ நூஹ் மஹ்ழரி

Post a Comment