நான் இல்லாத போது அந்த குரலின் வலிமையை நிச்சயமாக நீங்கள் உணர்வீர்கள்.
நான் தோற்கடிக்கப்பட்டிருக்கலாம். கேவலமான முறையில் வீழ்த்தப்பட்டிருக்கலாம். எனக்கு வருத்தம் இல்லை. நீங்கள்தான் வருத்தப்பட வேண்டும்.
உங்கள் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. உங்கள் ஓட்டுகள் திருடப்படுகின்றன. ஜனநாயகம் சூறையாடப்படுகிறது. இதை நீங்கள் ஏற்றுக் கொண்டாலும் இல்லை என்றாலும் இதுதான் உண்மை.
நீங்கள் எத்தனை முறை என்னை தோற்கடித்தாலும் நான் இதில் உறுதியாகவே இருக்கிறேன். நான் ஒன்றும் ஆகாமல் அழிந்து போகலாம். அழியும் வரைக்கும் உங்களுக்காக குரல் கொடுத்துக் கொண்டே தான் இருப்பேன்.
நான் இல்லாத போது அந்த குரலின் வலிமையை நிச்சயமாக நீங்கள் உணர்வீர்கள்.
காரணம் உண்மையை நிரந்தரமாக யாராலும் மூடி வைக்க முடியாது. என் உள் மனதும் என் மனசாட்சியும் நாட்டு மக்களுக்கு இதைத்தான் சொல்லிக் கொண்டே இருக்கிறது.
- ராகுல் காந்தி -

Post a Comment