Header Ads



கத்தார் மீதான எந்தவொரு தாக்குதலையும், அமெரிக்கா பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் கருதும்


கத்தார் எல்லைக்குள் அல்லது அதன் இறையாண்மை மீதான எந்தவொரு தாக்குதலையும், அமெரிக்க பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் கருதும் உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.


அண்மையில் நெதன்யாகு,  ட்ரம்ப  முன்னே கத்தார் பிரதமரிடம் மன்னிப்பு கேட்டதையடுத்து இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.


கத்தாரின் பாதுகாப்புக்கான அமெரிக்காவின் உறுதிப்பாட்டை பெரிதும் வலுப்படுத்தும் ஜனாதிபதி உத்தரவில் ஜனாதிபதி டிரம்ப் கையெழுத்திட்டார். அமெரிக்கா தனது நலன்களையும் கத்தாரின் நலன்களையும் பாதுகாக்க பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.