ரொக்கட் வேகத்தில் அதிகரிக்கும் தங்க விலை
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,
24 கரட் தங்கம் பவுண் ஒன்று 320,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 296,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 40,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 37,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இந்தத் தொகையானது கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது 14,000 ரூபாய் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை முதல் முறையாக ஒரு அவுன்ஸ் 4,000 அமெரிக்க டொலரை தாண்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உலகின் பொருளாதார மற்றும் அரசியல் நிலை குறித்த கவலைகளுக்கு மத்தியில் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளைத் தேடுவதால், தங்கத்தின் விலை முதல் முறையாக இவ்வாறு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment