Header Ads



முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பில் எவ்வித குறைப்பும் செய்யப்பட்டவில்லை.


முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பில் எவ்வித குறைப்பும் செய்யப்பட்டவில்லை. அவர்கள் கோரும் பாதுகாப்பு வழங்கப்படும் என  அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்றத்தில்  இன்றுv(07) உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அது தொடர்பில் தொடர்ந்துரையாற்றிய அவர், 


முன்னாள் ஜனாதிபதிகளுக்கான வரப்பிரசாதங்களை இரத்துச் செய்வதற்கான சட்டமூலத்தின் படி முன்னாள் ஜனாதிபதிகள் பெற்றுக் கொண்ட வரப்பிரசாதங்கள் மீள கையளிக்கப்பட்டுள்ளன. ஆனால் பாதுகாப்பு வரப்பிரதாசங்கள் இரத்துச் செய்யப்பட்ட சட்டமூலத்தில் உள்ளடக்கப்படமாட்டாது.


எனினும், சில முன்னாள் ஜனாதிபதிகள் பாவித்த பாதுகாப்பு வாகனங்கள் கையளிக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு தொடர்பில் அவர்கள் விடுக்கும் கோரிக்கைகளை நாம் நிறைவேற்றுவோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.    

No comments

Powered by Blogger.