Header Ads



நோபல் பரிசுக்கு 338 பேர் பரிந்துரை - இறுதிப் பட்டியலிலும் ட்ரம்ப் இல்லை


நோபல் பரிசு அக்டோபர் 10ஆம் திகதி அறிவிக்கப்பட இருக்கிறது.   ட்ரம்ப், அமைதிக்கான நோபல் தனக்கு வழங்கப்பட வேண்டுமென அறிவித்துள்ளார்.  ட்ரம்புக்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என பாகிஸ்தான், இஸ்ரேல், கம்போடியா, அர்மேனியா, அஜர்பைஜான் ஆகிய நாடுகள் வலியுறுத்தி வருவதுடன், அது தொடர்பாக நோபல் குழுவுக்கு பரிந்துரைக் கடிதங்களையும் அவர்கள் அனுப்பியுள்ளனர். 


ஆனால், அவருக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை என்ற தகவல்களும் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. 


எனினும் ட்ரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைப்பதற்கான வாய்ப்புகள் குறைவே என இவ்விருதுகள் குறித்து கூர்ந்து கவனித்துவரும் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் உள்ள அமைதி ஆராய்ச்சி மையத்தின் பணிப்பாளர் நினா கிரேகர் தெரிவித்துள்ளார். 


அந்த வகையில், இந்த ஆண்டுக்கான விருதுக்கான பட்டியலில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், நேட்டோ, ஹாங்காங் ஆர்வலர் சௌ ஹாங்-டங் மற்றும் கனேடிய மனித உரிமை சட்டத்தரணி இர்வின் கோட்லர் உட்பட 338 நபர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். 


டொனால்ட் ட்ரம்ப் போன்ற சில தலைவர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.  ஆனால் அவருடைய பெயர், ஜனவரி 31க்குப் பிறகு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 


எனவே, நோபல் விதிகள்படி அவை செல்லாது எனக் கூறப்படுகிறது. அதாவது, 2025 பரிசுக்கான பரிந்துரை காலக்கெடு ஜனவரி 31 ஆகும். 


மேலும் அவை 2026ஆம் ஆண்டுக்கு மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.  ஆகையால், ட்ரம்ப்க்கான நோபல் வாய்ப்பு என்பது மிகவும் குறைவாகவே இருப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர். 


முன்னதாக, இறுதிப் பட்டியலில் அவரது பெயரைச் சேர்க்காததுடன், ஐந்து பேர் கொண்ட நோபல் குழுவின் பெரும்பாலான உறுப்பினர்கள் அவரது பரிந்துரைக்கும் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.