Header Ads



அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் உலக உள நல தினம் - சட்டத்தரணி உமர் அலி விழிப்புணர்வு செயலமர்வு


அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் உள்ள பாலமுனை அல் ஹிக்மா  வித்தியாலயத்தில் உலக உள நல தினம் 2025 அக்டோபர் மாதம் 16ஆம் தேதி வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது. 


இந்நிகழ்வில் வளவாளராக பாலமுனை ஆதார வைத்தியசாலையின் சிரேஷ்ட தாதிய உத்தியோகத்தரும் உளவளத்துணையாளரும் சட்டத்தரணியுமான உமர் அலி எம் இஸ்மாயில் கலந்து கொண்டு பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் "பேரழிவு ஒன்றின் பின்னர் உளவளத் துணை சேவைக்கான அணுகுதல்"என்ற தலைப்பில் விழிப்புணர்வு செயலமர்வு ஒன்றினை நடத்தினார்.


நாடளாவிய ரீதியில் உளவளத் துணை சேவை வியாபித்திருந்தும், அரசு அதற்குரிய சகல நடவடிக்கைகள் எடுத்திருந்தும் பொதுமக்களுக்கு அச்சேவைகளை அணுகுவதற்குரிய போதுமான தகவல்கள் சரிவர கிடைக்கப் பெறாமையால் உளவளத் துணை சேவையினை மக்கள் அடைவது தடைப்பட்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.