பெரியமுல்லையில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது
11 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவரை நீர்கொழும்பு பொலிஸார் பெரியமுல்லையில் வைத்து கைது செய்துள்ளனர்.
பொலிஸ் வி்ஷேட பணியகத்தின் மேல் மாகாண புலனாய்வு பிரிவினர் வழங்கிய தகவலுக்கு இனங்க நீர்கொழும்பு பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் தல்வத்தவின் ஆலோசனையில் மோசடி தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் கார்த்தீபன் தலைமையிலான பொலிஸ் குழு வியாழக்கிழமை 16ம் திகதி ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்தனர். கைது செய்யும் போது 113 கிராம் 510 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருள் அவரிடம் இருந்துள்ளது. அதன் சந்தைப் பெறுமதி சுமார் 11 இலட்சம் ரூபாவாகும்.
மேலும் சந்தேக நபரிடமிருந்து மூன்று கையடக்க தொலைபேசிகள் மற்றும் போதைப் பொருள் விற்பனையால் பெறப்பட்டதாக கருதப்படும் 46,750 ரூபா பணமும் கைபற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட பஸ்லூன், வெளிநாட்டில் மறைந்திருந்து போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபடும் பஸ் சந்தன என்பவருடன் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரை நீர்கொழும்பு நீதிமன்றில் ஆஜர்படுத்தி தடுப்புக்காவல் உத்தரவை பெற்று தடுத்து வைத்து, விசாரிக்க பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Post a Comment