Header Ads



துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களை பிரபல்யப் படுத்த வேண்டாம்


நாட்டில் இடம் பெறும் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களை பிரபல்யப் படுத்த வேண்டாம் என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ கோரிக்கை விடுத்துள்ளார்.


அவர் ஊடகங்களிடம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.


செய்தி அறிக்கையிடலின் போது துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களை ஒன்றன்பின் ஒன்றாக எண்ணி இன்று 99 துப்பாக்கி சூட்டு சம்பவம் இன்று 101 வது துப்பாக்கி சூட்டு சம்பவம் என துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களை ஊக்குவிக்கும் வகையில் செய்தி அறிக்கையிடக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.


இவ்வாறு குற்ற செயல்களில் பிரபல்யப்படுத்தும் வகையிலான செய்தி அறிக்கையிடல் மூலம் பிரபலமடைய முயற்சிக்கும் தரப்பினரது இலக்கு நிறைவேற்றப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.