இனவாதத்தையும், மதவாதத்தையும் ஒதுக்கி அரசாங்கம் செயல்பட்டு வருகிறது - அமெரிக்க பிரதிநிதிகளிடம் ஜனாதிபதி
இனவாதம் மற்றும் மதவாதம் எனபவற்றை ஒதுக்கி தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்புதல், செயற்திறனான அரச சேவையை உருவாக்குதல், இராஜதந்திர உறவுகளை வெளிப்படையான முறையில் பராமரித்தல் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் மூலம் தொழில்நுட்ப தடைகளைத் வெற்றி கொள்ளுதல் ஆகிய நோக்கங்களை அடைய அரசாங்கம் செயல்பட்டு வருவதாக ஜனாதிபதி அநுரகுமார அமெரிக்க தூதுக்குழுவிடம் மேலும் தெரிவித்தார்.
நாட்டின் முதலீட்டு வாய்ப்புகள், வர்த்தக சூழல் மற்றும் சட்ட நிலைமைகள் குறித்து ஆய்வு செய்யும் நோக்கில் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் குழுவுடன் இன்று (11) நடைபெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கத்தின் கீழ் முதலீட்டாளர்கள் மற்றும் நாட்டிற்கு வரும் முதலீடுகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார மேலும் தெரிவித்தார்.

Post a Comment