Header Ads



போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய அரச இயந்திரம் இருப்பதை நாங்கள் புரிந்துள்ளோம்


இன்று, போதைப்பொருள், குற்றங்கள் மற்றும் அந்தக் குற்றங்களுடன் தொடர்புடைய அரசியல் மற்றும் அரச இயந்திரம் இருப்பதை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம். அதன் ஆழத்தையும் அளவையும் நாம் அளவிட முடியும். இது வெறும் போதைப்பொருள் கடத்தல்களோ வெறும் குற்றச் செயல் மேற்கொள்ளும் கும்பல்களின் செயல்பாடுகளோ அல்ல. 


இது அரசியலுடன் பின்னிப் பிணைந்துள்ளது. அரச இயந்திரத்தின் சில பகுதிகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் இதற்கு பங்களித்துள்ளன. அந்தப் பேரழிவு நமது கிராமங்களுக்கும் பரவி வருகிறது. எனவே, அந்தப் பேரழிவைத் தடுப்பதில் கடல்சார் கண்காணிப்பு மிகவும் முக்கியமானது. 


எனவே, அந்தக் கண்காணிப்பு நடவடிக்கைகளை முறையாகச் செயல்படுத்தி, தாய்நாட்டின் மற்றும் மக்களின் பாதுகாப்பு மற்றும் செழிப்புக்காகப் பணியாற்றும் பொறுப்பு உங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


இலங்கை விமானப்படைக்கு ஜனாதிபதி வர்ண விருது வழங்கல் மற்றும் கெடெட் அதிகாரிகளை  விமானப்படை அதிகாரிகளாக நியமிப்பது தொடர்பில் இன்று (18) காலை சீனக்குடா விமானப் படைக் கல்விப்பீடத்தில் நடைபெற்ற விழாவில்  கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.