அரசாங்கம் எடுத்த சில, முயற்சிகளை பாராட்டுவதாக நிசாம் காரியப்பர் தெரிவிப்பு
இன ரீதியான அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு தேர்தலுக்கு முகங்கொடுத்த நாம் தொடர்ந்தும் அதனைப் பின்பற்ற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.
தமிழ், முஸ்லிம், சிங்களம் என்ற அடையாளத்துக்கு அப்பால் மக்களின் நிலைமைகளை ஏற்றுக் கொள்ளக்கூடிய சூழல் நீதிமன்றத்திலும் உருவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அவை குறித்து அரசாங்கம் எடுத்த சில முயற்சிகளை பாராட்டுவதாகவும் நிசாம் காரியப்பர் குறிப்பிட்டார்.
விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் இதனைக் கூறினார்.

Post a Comment