வீதிகள் தங்கத்திலா நிர்மாணிக்கப்படுகின்றது என்று கேட்டீர்கள்...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தில் வாய்மூலம் எதிர்ப்பு தெரிவித்த போதும் வாக்கெடுப்பைக் கோரவில்லை. வாக்கெடுப்பைக் கோருவதற்கு அரசாங்கத்திற்கு முதுகெலும்பு இல்லையா? நாடுகள் பல இலங்கைக்கு ஆதரவாக உள்ளன. எனினும், டயஸ்போராக்களையா? விடுதலைப் புலி ஆதரவாளர்களையா? மகிழ்விக்கப் போகின்றீர்கள் என நாமல் ராஜபக்ஷ Mp கேள்வியெழுப்பினார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (08) அன்று உரையாற்றிய, அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போதைய அரசாங்கம் அதிவேக வீதி கட்டமைப்பை அமைக்க வேண்டும் என்ற நிலைக்கு வந்துள்ளது. அதிவேக வீதியை அமைத்தால் நாய்கள், விலங்குகளுக்கு வீதியைக் கடக்க முடியாத நிலைமை ஏற்படும் என்றே அன்று கூறினீர்கள். இந்த வீதிகள் தங்கத்திலா நிர்மாணிக்கப்படுகின்றது என்றும் கேட்டீர்கள். ஆனால் இப்போது உங்களின் தலைவர் எஞ்சியுள்ள அதிவேக வீதியை அமைக்க நடவடிக்கை எடுக்கின்றார். அன்று நீங்கள் தடைகளை ஏற்படுத்தியிருக்காவிட்டால் இப்போது ஜனாதிபதிக்கு அதிவேக வீதிகளைத் திறந்து வைத்திருக்கவும் முடியும்.
இப்போது மிருகக்காட்சி சாலையிலும் விலங்குகள் திருடப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது. நீங்கள் கடற்படைத் தளபதியை கைது செய்துள்ளீர்கள். விடுதலைப் புலி புலனாய்வில் இருந்த ஒருவர் வழங்கிய சாட்சிக்கமைய கைது செய்துள்ளீர்கள். சிஐடிக்கு ஏற்றவாறு வாக்குமூலங்கள் பதியப்படுகின்றன

Post a Comment