Header Ads



நீதி அமைச்சரின் மேலதிக செயலாளர் கைது


நீதி அமைச்சரின் மேலதிக செயலாளராகப் பணியாற்றி வருகின்ற அதிகாரி இன்று -08-  கைது செய்யப்பட்டார்.


மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமான காணி தொடர்பான சந்தேகத்திற்கிடமான இழப்பீட்டு மோசடி தொடர்பாக  கைது செய்யப்பட்டுள்ளார்.


சஷீந்திர ராஜபக்சவுக்கு எதிரான லஞ்ச ஊழல் விசாரணையில் இரண்டாவது சந்தேக நபராக இந்த அதிகாரி அடையாளம் காணப்பட்டுள்ளார்.


இழப்பீடுகளுக்கான அலுவலகத்தின் முன்னாள் பதில் பணிப்பாளர் நாயகமாக அவர் பணியாற்றிய காலத்தில், அரச சொத்துக்களை தவறாகப் பயன்படுத்தி, ரூபா 885,000 இழப்பீட்டுத் தொகையை அங்கீகரிக்குமாறு அரசாங்க அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

No comments

Powered by Blogger.