அஜ்மல் உடலில் துடிக்கும், அமல் பாபுவின் இதயம்
திருவனந்தபுரம் பைக் விபத்தில் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
அமல் பாபுவின் உடலின் சில உறுப்புகளை தானம் செய்ய முடியும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்திய நிலையில், உடலுறுப்பு தானம் செய்ய பெற்றோர் சம்மதித்தனர். உடனடியாக தானம் செய்வதற்கான நடைமுறைகள் துவங்கியது.
அமல் பாபுவின் இதயம் எர்ணாகுளம் லிஸி மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவந்த மலப்புறம் மாவட்டம் சேர்ந்த 35வயதான அஜ்மல் என்ற இளைஞருக்கு பொருத்த முடிவானது.
கேரள அரசு ஏர் ஆம்புலன்ஸ் வசதி செய்து கொடுக்க, இதய அறுவை சிகிச்சை நிபுணர்கள், சுகாதாரத்துறை, காவல்துறை ஒருங்கிணைப்புடன் அமல்பாபு இதயம் பாதுகாப்பான முறையில் கொண்டு செல்லப்பட்டு அஜ்மல் உடலில் பொருத்தப்பட்டது.
நேற்றைய தினம் இதயமாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்த நிலையில் 24மணி நேர மருத்துவ கண்காணிப்புக்கு பின்னர் அமல்பாபுவின் இதயம் அஜ்மல் உடலில் துடிக்க ஆரம்பித்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அமல்பாபு பெற்றோருக்கு இறைவன் ஆறுதலை வழங்குவானாக அஜ்மலுக்கு பூரண உடல்நலத்தை அருள்வானாக..
Colachel Azheem

Post a Comment