Header Ads



யாழ்ப்பாண பல்கலைக்கழக பொன் விழா


யாழ்ப்பாண பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்த  நிலையில் பொன் விழா கொண்டாட்டங்கள் இன்று (06) யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் ஆரம்பமாகியது.


இலங்கை பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண வளாகமாக 1974 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இவ் உயர்கல்வி நிலையம், இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமாக வியாபித்து நிற்கிறது.


பொன் விழா நிகழ்வில் இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கபில செனிவிரத்ன பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டிருந்தார்.


பல்கலைக்கழகத்தின் 50 வருடகால கல்விப் பணி வரலாற்றை எடுத்தியம்பும் வகையில் அமைந்த வரலாற்றுப் பொக்கிஷமான “யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பொன்அகவை வரலாறு” எனும் நூலும், பல்கலைக்கழகத்தின் பொன்னகவையை நினைவு கூரும் வகையிலான நினைவு முத்திரை வெளியீடும இந் நிகழ்வில் நடைபெற்றது.

No comments

Powered by Blogger.