பொத்துவில் பிரதேச செயலக, புதிய நிரந்தர கணக்காளராக பாத்திமா சபானா
பொத்துவில் பிரதேச செயலகத்திற்கு புதிய நிரந்தர கணக்காளராக ஒலுவில் பிரதேசத்தினைச் சேர்ந்த செல்வி. எஸ். பாத்திமா சபானா நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வணிக நிர்வாக இளங்கலை பட்டதாரியான செல்வி.எஸ். பாத்திமா சபானா இலங்கை கணக்காளர் சேவை பரீட்சையில் சித்தியடைந்து ஒலுவிலில் சித்தியடைந்த முதல் பெண்மணி ஆவார்.
அவர் கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வில், அவரது பெற்றோரும் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
Post a Comment