அபூ உபைதாவின் மகனார் குறித்து, ஒரு ஆச்சரியமான தகவல்
ஆனால், ஹமாஸின் அரசியல் விவகாரங்களுக்கான செய்தி தொடர்பாளர் அபூ உபைதா என்று சொன்னால் உடனே புரிந்து கொள்வார்கள். ஆம், அவருக்கு ஒரே ஒரு மகன் மட்டுமே இருந்தார், அவர் தான் நூர் அல்-ஜமாஸி.
2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி, ஆக்கிரமிப்புக்கு எதிரான சுதந்திரப் போராட்டத்தின் புதிய கட்டத்தை ஹமாஸ் ஆரம்பித்தபோது, நூர் ஜெர்மனியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துக் கொண்டிருந்தார். சண்டை தொடங்கிய முதல் வாரத்திலேயே, தனது மகன் திரும்பி வந்து சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று தந்தை கேட்டுக் கொண்டார்...
2025 ஆம் ஆண்டு அக்டோபர் 8 ஆம் தேதி பகலில், நெட்ஸரீம் பகுதியில் ஆக்கிரமிப்பு கூலிப்படையினருக்கு எதிராக நடந்த சண்டையின் போது, அவருக்குக் காலில் காயம் ஏற்படவே, அருகில் உள்ள ஒரு தற்காப்புப் புகலிடத்திற்கு அவர் நகர்ந்தார்... இரண்டு ஆக்கிரமிப்பு கூலிப்படையினரை மேலே அனுப்பிய அவரை கொலைச் செய்ய முடியாமல் போன ‘டையப்பர் படை’ அந்தப் பகுதி முழுவதும் குண்டுவீசியது...
உயிர் தியாகி நூரின் உடல் இன்று (அக்டோபர் 11, 2025) அவர் தங்கியிருந்த வீட்டின் இடிபாடுகளுக்கு அடியில் இருந்து சுதந்திரப் போராட்ட வீரர்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளது... கடைசி நிமிடம் வரை போராடிய அந்தப் போராளி, தனது கையில் இருந்த கொடிடை ஒருபோதும் கீழே விழ அனுமதிக்கவில்லை... சில மாதங்களுக்கு முன்பு கர்ப்பிணியாக இருந்த தனது சகோதரியும் தந்தையும் கொல்லப்பட்ட போதும், போராட்ட பூமியில் இருந்து அவர் ஒரு அங்குலம் கூட பின்வாங்கவில்லை...
தனது அறிவையும், திறமையையும் கடைசி நிமிடம் வரையிலும் குத்ஸின் விடுதலைக்கான சுதந்திரப் போராட்டத்திற்காக அவர் அர்ப்பணித்தார் 🔥❤️
அந்தத் தீரமிக்க தந்தையின், வீரமிக்க மகன் தாய்நாட்டிற்காக, குத்ஸிற்காக நடத்திய சுதந்திரப் போராட்டங்களை இறைவன் கபூல் செய்வானாக (ஏற்றுக் கொள்வானாக)... 🤲🤲
Mubarak ravuthar

Post a Comment