Header Ads



தங்க வியாபாரம் - ஹிஸ்புல்லாஹ்வின் தரப்பு அனுப்பிவைத்த தகவல்


(ஹிஸ்புல்லாஹ்வின் ஊடகப்பிரிவு அனுப்பி வைத்த தகவல்)


​கானா ஊடகங்களில் வெளிவந்ததாக கூறப்பட்டு, தங்க வியாபாரத்தில் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்  ஏமாற்றப்பட்டதாக பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகிறது. 


அதில் கூறப்படும் தகவல்களை முற்றிலும் மறுக்கிறோம், அதில் எவ்விதமான உண்மைத்தன்மையும்  இல்லை என்பதை உறுதிபட தெரிவித்துக்கொள்கிறோம்.


​உண்மையில், எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் வியாபார நோக்கத்திற்காக சவூதி அரேபியாவை சேர்ந்த நண்பர்களுடன் கானா நாட்டிற்குச் சென்றிருந்தபோது, அங்கே சிலர் ஏமாற்ற முனைந்ததை அறிந்து உடனடியாக, இந்த ஏமாற்று நடவடிக்கை குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது. 


அதனைத்தொடர்ந்து, ஏமாற்ற முனைந்த 11 பேரையும் பொலிசார் கைது செய்தார்கள்.


​இதனைத்தவிர, கலாநிதி ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை மீண்டும் உறுதிபட தெரிவித்துக்கொள்கிறோம்.


​அரசியல் நோக்கங்களுக்காகச் சில தகவல்கள் தவறாகவும், பிழையாகவும் பரப்பப்படுவதையிட்டு நாம் மிகுந்த வருத்தம் அடைகிறோம்.

No comments

Powered by Blogger.