Header Ads



ஜம்இய்யத்துஷ் ஷபாப் AMYS நிறுவனத்தின் மதம்கடந்த மகத்தான, மனிதநேய பணிக்கு சுகாதார அமைச்சு பாராட்டு


AMYS  நிறுவனத்தின் இலவச கண்புரை சத்திர சிகிச்சைத் திட்டம்  மதம் கடந்த மனித நேயத்துக்கான  மகத்தான பணியாகும். AMYS  நிறுவனத்தின் கண்ணுக்கான ஒளி  மதம் கடந்த மனித நேயத்துக்கான ஒளியாகும்

AMYS (ஜம்இய்யத்துஷ் ஷபாப்) நிறுவனத்தினால்  காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் ஏற்பாடு செய்யப்பட்ட இலவச கண் சத்திர சிகிச்சை முகாமின் ஆரம்ப அங்குரார்ப்பண நிகழ்வில் பொழுது பிரதம அதிதியாக கலந்து கொண்ட கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் அமைச்சின் சிரேஷ்ட மேலதிக செயலாளர்  எஸ். ஹரன் மேற்கண்டவாறு  தெரிவித்தார்.  


மேற்படி நிகழ்வு வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர்  Dr. M.S.M. ஜாபிர் தலைமையில் நடைபெற்றதுடன் AMYS  நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் M.S.M. தாஸீம்,  நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. ஜே. எம் வாரித்,   அரச நிறுவனங்களின் முக்கிய அதிகாரிகள், காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும்  முக்கிய பிரமுகர்கள்,  வைத்தியசாலை  அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர். 


இந்நிகழ்வின் போது மேலதிக செயலாளர் மேலும் கூறுகையில்,

 

இனமத வேறுபாடுகளுக்கு அப்பால் கடந்த பல வருடங்களாக இந்நிறுவனம் 30000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலவச கண் சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டுள்ள நிகழ்வு சகலராலும் பாராட்டத்தக்கதோர் விடயமாகும். செய்தவர்கள் வாழ்த்து மறைந்தாலும் செய்யப்பட்டவர்கள் வாழ்ந்து நன்றியுடன் நினைவு கூறுவார்கள். என்றார். 


AMYS  நிறுவனம் கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் கண்புரை சத்திர சிகிச்சை முகாம்களை  இன, மத பேதங்களுக்கு அப்பால் மனிதாபிமான அடிப்படையில் இலங்கையில் நடாத்தி வருவதுடன், 1997 ஆம் ஆண்டு முதல் பல்வேறு  சமூக அபிவிருத்தித்  திட்டங்களை இலங்கையில் நடைமுறைப்படுத்தி வரும்   நிறுவனமாகும்.  அந்தவகையில், கண்புரை சத்திர சிகிச்சையில் இதுவரை 31 முகாமைகளை வெற்றிகரமாக  நடாத்தி முடித்து, அன்றாட வாழ்வில் பல இடர்களுடன் வாழ்ந்த 32000 ஆயிரத்துக்கும் அதிகமான நோயாளர்களின் இழந்த பார்வையை சத்திர சிகிச்சைக்கு பின்னர்  மீளப்பெற்றுக்  கொடுப்பதற்கு காரணமாக இருந்திருக்கிறது. 


இப்பாரிய வேலைத்திட்டத்தினை AMYS  நிறுவனம் கடந்த 26 வருடங்களாக அல்பஸர் சர்வதேச அமைப்பு (Albasar International Foundation) இணைந்து ஏற்பாடு செய்து வருவதுடன், இதற்காக சர்வதேச ரீதியில் பல மனிதாபிமான நற்பணிகளை மேற்கொண்டு வரும் பல்வேறு அமைப்புக்கள் நிதி அனுசரணையை வழங்கி வருகின்றன. அந்த வகையில் கடந்த காலங்களில் ஐக்கிய அமீரகத்தின் ‘நூர் துபாய்’ திட்டம்   குவைத் செம்பிறை அமைப்பு, கட்டார்  செரிட்டி என்பன முக்கியமான அமைப்புகளாகும். குறிப்பாக சர்வதேச ரீதியாக பல நாடுகளில் பணியாற்றி வரும்  சவூதி அரேபியாவின்  நிவாரண  மற்றும்  மனிதநேயப் பணிகளுக்கான மன்னர் சல்மான் மையத்தின் ‘நூர் சவூதி’ திட்டம்  மிக முக்கியமான திட்டங்களில் ஒன்றாகும். இந்த திட்டத்தினால் உலகளவில் ஆயிரக்கணக்கான மக்கள் பயனடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 


நிகழ்வின் போது  உரையாற்றிய AMYS  நிறுவனத்தின் பணிப்பாளர் 


இலங்கையில் இந்த செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்த இலங்கை அரசு அதேபோன்று அரச நிறுவனங்கள், திணைக்களங்கள் அதன் அதிகாரிகள் தொடர்ந்து  வழங்கிவரும் ஒத்துழைப்புக்களுக்கு நன்றி தெரிவித்ததுடன்   இந்த திட்டம் இலங்கையில் தொடதேர்ச்சியாக நடைபெறுவதற்கு காரணமாக இருக்கும் அனுசரணையாளர்களையும் அன்புடன் நினைவு கூர்ந்து தனது  இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்தார்.  



No comments

Powered by Blogger.