இலங்கையர்களிடமிருந்து ஒகஸ்ட் மாதம், வந்த 681 மில்லியன் டொலர்கள்
வெளிநாட்டு பணவனுப்பல் தற்போது அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கைக்கு, ஒகஸ்ட் மாதத்தில் வெளிநாட்டு தொழிலாளர்களிடமிருந்து அனுப்பப்பட்ட பணம் 681 மில்லியன் டொலர்களாக பதிவாகியுள்ளது,
இது 17.9 சதவீத வளர்ச்சி என குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஒகஸ்ட் மாதத்தில் வெளிநாட்டு தொழிலாளர்களிடமிருந்து பெறப்பட்ட பணத்தின் மொத்த பெறுமதி 577 மில்லியன் டொலர்கள் எனவும் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

Post a Comment