ஒரே பந்தில் 4 சிக்ஸர்கள்..
கிஃபாயா என்கிற பாலஸ்தீன துண்டை தோள் மேல் போர்த்தியவாறும் பாலஸ்தீனக் கொடியைத் தூக்கிப் பிடித்தும் பாலஸ்தீனுக்கு ஆதரவான தன்னுடைய உணர்வை அழகாக, அழுத்தமாக வெளிப்படுத்தியிருக்கின்றார் முதல்வர். இது இரண்டாவது சிக்ஸர்.
பாலஸ்தீன மண்ணில் போர் நிறுத்தத்தைக் கோரியும் இரண்டு தரப்பிலும் அனைத்து கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும் பேசிய முதல்வர் சர்வதேச அமைப்புகளோடு ஒன்றிணைந்து இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்குமாறு ஒன்றிய அரசுக்குக் கோரிக்கை விடுத்திருக்கின்றார் முதல்வர். இது மூன்றாவது சிக்ஸர்.
எல்லாவற்றுக்கும் மேலாக பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாகவும் காஸா இனப் படுகொலையைக் கண்டித்தும் தமிழ்நாட்டு சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அறிவித்திருக்கின்றார். இது நான்காவது சிக்ஸர்.
எல்லாப் புகழும் இறைவனுக்கே!
Azeez Luthfullah

Post a Comment