Header Ads



25 பல்வேறு எதிர்க்கட்சி பிரதிநிதிகளிடையே இரவுநேர சந்திப்பு


ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பொன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது. தனியார் விருந்தகத்தில் நேற்று (02) இரவு எதிர்க்கட்சி அரசியல் கட்சித் தலைவர்களின் சந்திப்பும் இரவு விருந்துபசாரமும் இடம்பெற்றுள்ளது.


UNP யின் தவிசாளர் வஜிர அபேவர்தனவின் அழைப்பின் பேரில் 25க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள்  பங்கேற்றனர்.  நாமல் ராஜபக்ஷ மற்றும் பேராசிரியர்  பீரிஸ் ஆகியோர் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்த தங்கள் நிலைப்பாட்டை இந்தக் கூட்டத்தில் விளக்கினர்.


கூட்டு எதிர்க்கட்சியின் தலைமையில் கொழும்பில் ஒரு பொதுக் கூட்டத்தை நடத்துவது குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன. திர்காலத்தில் எதிர்க்கட்சியாக இணைந்து எடுக்க வேண்டிய பல முக்கிய நடவடிக்கைகள் குறித்து கட்சித் தலைவர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர்.


ரணில்  அங்கு முன்வைத்த திட்டங்களை அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த சந்திப்பு மிகவும் பயனுள்ளதாகவும் முக்கியமானதாகவும் இருந்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.