12 மாவட்டங்களுக்கு எலிக் காய்ச்சல் குறித்து எச்சரிக்கை
நாட்டில் 12 மாவட்டங்கள் (Leptospirosis) பரவுவதற்கான அதிக ஆபத்துள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று (10) நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
காலி, இரத்தினபுரி, களுத்துறை, கேகாலை, குருநாகல், மாத்தறை, ஹம்பாந்தோட்டை, அனுராதபுரம், பொலன்னறுவை, பதுளை, கம்பஹா மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்கள் லெப்டோஸ்பிரோசிஸ் பரவலுக்கான அதிக ஆபத்துள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
மேலும், நோயைக் கட்டுப்படுத்தத் தேவையான Doxycycline மருந்தின் போதுமான இருப்பு நாட்டில் இருப்பதாக அமைச்சர் வலியுறுத்தினார்.
எலிக் காய்ச்சலைக் கட்டுப்படுத்த மாதத்திற்கு 10,000 Doxycycline மாத்திரைகள் தேவைப்படுவதாகவும், மூன்று மாதங்களுக்குத் தேவையான அளவு Doxycycline ஏற்கனவே இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் மேலும் ஒன்பது மாதங்களுக்குத் தேவையான அளவு மருந்து கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் மேலும் பதிலளித்தார்.

Post a Comment