Header Ads



சர்வதேச சமூகம் இரட்டை நிலைப்பாட்டை நிறுத்த வேண்டும் - கட்டார் பிரதமர்


சர்வதேச சமூகம், இரட்டை நிலைப்பாட்டை நிறுத்தி விட்டு இஸ்ரேல் இதுவரை செய்த குற்றங்களுக்காக அந்த நாட்டை தண்டிக்க  தயாராக வேண்டும் என கட்டார் பிரதமர் அல் தானி வலியுறுத்தியுள்ளார்.  


நமது சகோதர பாலஸ்தீன மக்கள் மீது தொடர்ந்து நடத்தி வரும் அழிப்புப் போருக்கும், அவர்களை அவர்களின் நிலத்திலிருந்து வெளியேற்றுவதை நோக்கமாகக் கொண்டவர்களுக்கும் எந்தப் பலனும் கிடைக்காது என்பதை இஸ்ரேல் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் அல் தானி குறிப்பிட்டுள்ளார்.


காஸா போரை முடிவுக்கு கொண்டுவர எடுக்கப்படும் முயற்சிகளை சீர்குலைக்க இஸ்ரேலை அனுமதிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


அரபு மற்றும் இஸ்லாமிய தலைவர்களின் அவசர உச்சி மாநாடு ஒன்றை கட்டார் திங்கட்கிழமை 15 ஆம் திகதி ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.