ஐஸ் போதைப்பொருள் தயாரிக்கும் மற்றுமொரு இடம் கண்டுபிடிப்பு - ஈரானியர்கள் தப்பியோட்டம்
ஐஸ் போதைப்பொருள் தயாரிக்கப்படும் ஹம்பாந்தோட்டை பகுதியில் உள்ள ஒரு விடுமுறை விடுதியில் வைக்கப்பட்டிருந்த உபகரணங்கள், ரசாயனங்கள், ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த கார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பொலிஸார்அதிகாரியால் ஹெரோய்ன் கொண்டு செல்லப்பட்டபோது கைப்பற்றப்பட்ட அதே கார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். இந்தோனேசியாவிலிருந்து நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட எம்பிலிப்பிட்டியே சுரங்காவிடம் இருந்து கிடைத்த தகவலின் பேரில் விசாரணைகள் நடத்தப்பட்டன.
இதுவரை தெரியவந்துள்ள தகவல்களின்படி, பல ஈரானியர்களும், உள்ளூர் மக்களும் மயூரபுர பகுதியில் அமைந்துள்ள உணவகத்தில் இந்த ஐஸ் போதைப்பொருள் தயாரித்துள்ளனர், ஈரானியர்கள் தற்போது நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர்.

Post a Comment