கத்தார் மீது இஸ்ரேல் தாக்குதல் படுதோல்வி - அரபு நாடுகள் என்ன செய்கின்றன..?
அமெரிக்க உதவியோடு 15 போர் விமானங்களைக் கொண்டு, சர்வதேச விதிகள் அனைத்தையும் மீறி அமெரிக்காவின் நேச நாடான கத்தார் மீது இஸ்ரேல் அடுத்தடுத்து பத்து ஏவுகணைகளை வீசி நடத்திய துல்லியத் தாக்குதல் படுதோல்வியில் முடிந்தது.
இஸ்ரேல் குறி வைத்த அனைவருமே உயிர் தப்பினார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே.
இந்த வகையில் இது இஸ்ரேலின் அப்பட்டமான தோல்வியாகும்.
இங்கு எழுகின்ற கேள்வி ஒன்றே. இஸ்ரேல் இப்படி ஒரே சமயத்தில் கஸ்ஸா, மேற்குக் கரை, சிரியா, ஏமன், கத்தார் என தாக்கிக் கொண்டிருக்கின்றதே, அரபு நாடுகள் என்ன செய்துகொண்டிருக்கின்றார்கள்?
தங்களுடைய முறை எப்போது வரும் என்று காத்துக் கொண்டிருக்கின்றார்களா? என்று அல்ஜஸீரா பத்திரிகையாளர் அல்மன்சூர் கேள்வி எழுப்பியிருப்பது பொருள் பொதிந்தது மட்டுமல்ல, இதயத்தைச் சம்மட்டியால் அடிப்பதைப் போன்று கனமானதும் வலி நிறைந்ததுமாகும்.
அல்லாஹ் போதுமானவன். அவனே மிகச் சிறந்த புரவலன். காப்பாளன்.
- Azeez Luthfullah -

Post a Comment