Header Ads



நேபாளத்தில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பு குறித்து விசேட கவனம்


நேபாளத்தில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பு குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. நேபாளத்தில் வசிக்கும் எந்த இலங்கையருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.  22 இலங்கை மாணவர்கள் உட்பட 99 இலங்கையர்கள் நேபாளத்தில் உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


நேபாளத்திலுள்ள இலங்கையர்கள் தத்தமது குடியிருப்புகளிலேயே இருக்குமாறும், போராட்டங்கள் இடம்பெறும் இடங்களுக்குச் செல்ல வேண்டாம் என்றும் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா குறிப்பிட்டு, ஊரடங்கு உத்தரவைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.


குறித்த சந்தர்ப்பத்தில் ஏதேனும் தேவை ஏற்பட்டால் பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் தயாராக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.