Header Ads



47 இஸ்ரேல் பணயக் கைதிகள் தொடர்பில் ஹமாஸ் விடுத்துள்ள எச்சரிக்கை


காசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீதமுள்ள 47 இஸ்ரேலிய பணயக் கைதிகளின் புகைப்படங்களை ஹமாஸ் வெளியிட்டுள்ளது.


ஒவ்வொரு பணயக் கைதிக்கும் 1986 இல் பிடிபட்டு கொல்லப்பட்ட இஸ்ரேலிய விமானப்படை அதிகாரியான 'ரான் ஆராட்' என்று பெயரிடப்பட்டு அதனுடன் ஒரு எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


அந்த புகைப்படத்தில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்ததற்கும் எதிர்ப்பை மீறி காசாவை கைப்பற்றும் நோக்கில் படையெடுப்பதற்கும் கண்டனம் தெரிவித்து வாசகம் எழுதப்பட்டுள்ளது.


மேலும் இஸ்ரேலின் ஒவ்வொரு நடவடிக்கையும் உயிருடனோ அல்லது இறந்த பணயக் கைதியையோ பெற முடியாத அளவுக்கு இருப்பதாக ஹமாஸ் அமைப்பினர் குறிப்பிட்டுள்ளனர். 


அவர்களின் தலைவிதி, ரான் ஆராட் போலவே இருக்கும் என்றும் மிரட்டல் விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


இஸ்ரேல் மற்றும் காசாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் இடையேயான போர் இரண்டு ஆண்டுகளை எட்டியுள்ளது. கடந்த 2023ல் ஹமாஸ், இஸ்ரேலுக்குள் புகுந்து நடத்திய தாக்குதலில், 1200 பேர் கொல்லப்பட்டனர்.  மேலும் 250 பேரை பணயக் கைதிகளாக பிடித்து சென்றனர்.

No comments

Powered by Blogger.