Header Ads



இலங்கையர்களின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட மூன்றாவது நெனோ செயற்கைக்கோள் நாளை விண்ணில் பாய்கிறது


இலங்கை பொறியாளர்களின் தொழில்நுட்ப பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட மூன்றாவது நெனோ செயற்கைக்கோள் நாளை (19) சுற்றுப்பாதையில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மொரட்டுவை ஆர்தர் சி. கிளார்க் நிறுவனம் தெரிவித்துள்ளது. 


பர்ட்ஸ் - எக்ஸ் டிராகன்ஃபிளை என்று பெயரிடப்பட்ட இந்த செயற்கைக்கோள், கடந்த ஓகஸ்ட் மாதம் 24ஆம் திகதி நாசாவால் ஏவப்பட்ட SPX-33 ரொக்கெட் மிஷன் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. 


2019 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இலங்கையின் முதல் நெனோ செயற்கைக்கோளானா "ராவணன்-1" செயற்கைக்கோளும், 2022 ஆம் ஆண்டு 5 சர்வதேச தரப்பினர்களை உள்ளடக்கிய தொழில்நுட்ப ஒத்துழைப்பு திட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட "கிட்சூன்" செயற்கைக்கோளும் இதற்கு முன்னர் சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்டிருந்தன.

 

அதன்படி, பர்ட்ஸ் - எக்ஸ் டிராகன்ஃபிளை நெனோ செயற்கைக்கோள் நாளை பிற்பகல் 2.15 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து சுற்றுப்பாதையில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.