Header Ads



ஆம்புலன்ஸ் ​​விபத்து - பீர் கேன்கள் கண்டுபிடிப்பு


தெனியாய பிரதேசத்தில் இருந்து மாத்தறை நோக்கி,  2 நோயாளிகளை ஏற்றிச்சென்ற  ஆம்புலன்ஸ், ​​விபத்துக்குள்ளான நிலையில் அதிலிருந்து இரண்டு பீர் கேன்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக மொரவக்க பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


நோயாளிகளை ஏற்றிச் சென்ற போது  மொரவக்க அது எல பகுதியில் வைத்து வீதியை விட்டு விலகி  ஒரு வீட்டின் நுழைவாயிலில் மோதியுள்ளது.


 விபத்து இடம்பெற்ற நேரத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதுடன் பின்னர் பொலிஸில் சரணடைந்த நிலையில் அவர் விபத்தின் போது குடிபோதையில் இருந்தாரா என்பது தொடர்பான விசாரணைக்காக மாத்தறை பொது  வைத்தியசாலையின் தடயவியல் வைத்தியரிடம் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.