Header Ads



இவர்களின் வலி மனசாட்சியோ, மனிதநேயமோ நிறுத்தாத ஒரு குற்றத்திற்கு சாட்சியாக உள்ளது...


காசாவில் உள்ள கடற்கரை முகாமில் இவர்கள் அதிகாலையில்  தூங்கிக் கொண்டிருந்தபோது, ஏவுகணைகளால் இந்தக் குடும்பம் இடிபாடுகளுக்குள் புதைக்கப்பட்டது.


அல்-ஹசாரி குடும்பத்தினர் கொடிய  ஏவுகணைகளால் குறிவைக்கப்பட்டு அவர்களின் தலைக்கு மேல் கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. 


ஏவுகணைகளால் அவர்கள் குறிவைக்கப்பட்ட பின்னரும் குடும்பம் உயிருடன் இருந்தது. அலறிக் கெஞ்சியது. ஆனால் அவர்கள் இடிபாடுகளில் இருந்து மீட்க,  பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததால் அவர்கள் உயிர்வாழ முடியவில்லை.  எனவே இடிபாடுகள்   அவர்களை விழுங்கின. அவர்கள் தியாகிகள் ஆகினர்.


மஹ்மூத் ஃபௌத் அல்-ஹஸ்ரி, அவரது மனைவி மற்றும் குழந்தைகள், ஜூட் மற்றும் எலைன். நாதர் ஃபௌத் அல்-ஹஸ்ரி, அவரது மனைவி நவீன் நஸ்மான், அவரது மகள் மருத்துவர் யாரா, மற்றும் அவரது குழந்தைகள், பொறியாளர் அகமது, ஃபௌத் மற்றும் பரா.


அல்லாஹ்வின் புத்தகத்தைக் (குர்ஆஆன்)  காக்கும் உடன்பிறப்புகள்: பிலால், ஃபௌத், ஒசாமா முஹம்மது அல்-ஹஸ்ரி,மற்றும் அவர்களின் சகோதரி செவிலியர் இமான் ஆகியோரும் அடங்குவர்.


அவர்களின் வலி, மனசாட்சியோ, மனிதநேயமோ நிறுத்தாத ஒரு குற்றத்திற்கு சாட்சியாக உள்ளது...

No comments

Powered by Blogger.