ரத்தன தேரர் வெளியே வந்தார்
அத்துரலியே ரத்தன தேரரை பிணையில் விடுதலை செய்யுமாறு நுகேகொடை நீதவான் நீதிமன்றம் இன்று (12) உத்தரவிட்டுள்ளது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அத்துரலியே ரத்தன தேரர் இன்றைய தினம் (12) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அத்துரலியே ரத்தன தேரரை 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் மற்றும் 10 ஆயிரம் ரூபா பெறுமதியான ரொக்க பிணையில் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Post a Comment