ஜனாதிபதி - ஐ.நா. செயலாளர் சந்திப்பு
நியூயோர்க்கிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுரகுமார மற்றும் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு, ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் இடம்பெற்றது.
ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தை சென்றடைந்த ஜனாதிபதியை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் வரவேற்றதுடன், அவர்கள் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டனர்.
இலங்கையின் புதிய பொருளாதார சீர்திருத்த செயல்முறையின் முன்னேற்றம், இலங்கையை பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் புதிய தளத்திற்கு உயர்த்துவதற்காக அரசாங்கம் தற்போது செயல்படுத்தி வரும் செயற்திட்டங்கள் குறித்தும் ஜனாதிபதி விளக்கினார்.
இலங்கை அரசாங்கத்தின் புதிய முற்போக்கான செயற்திட்டத்தைப் பாராட்டிய பொதுச்செயலாளர், அதற்காக ஐக்கிய நாடுகள் சபை முன்நிற்பதாகவும், முழு ஆதரவையும் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.

Post a Comment