பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் பங்கேற்ற கொலம்பிய ஜனாதிபதி - விசாவை ரத்து செய்தது அமெரிக்கா
நியூயார்க்கில் பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் பங்கேற்றபோது 'பொறுப்பற்ற மற்றும் ஆத்திரமூட்டும் வகையில்' செயல்பட்ட கொலம்பிய ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோவின் விசாவை ரத்து செய்வதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.
கொலம்பிய ஜனாதிபதி பெட்ரோ வன்முறையைத் தூண்டிவிட்டு, உத்தரவுகளை மீறுமாறு குறிப்பிட்டதாக அமெரிக்க வெளியுறவுத்துறை கூறியது.
இது ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு மீறிய செயல் என்று வாஷிங்டன் கருதியதாகவும் இதனால் விசா ரத்துச் செய்யப்பட்டதாகவும் அறிவித்துள்ளது.

Post a Comment