அல்லாஹ் இந்த சிறுவனின், விசால மனதை பொருந்திக் கொள்வானாக...
சென்னை கண்ணகி தெருவில் உள்ள மஸ்ஜிதே முகமது ரஃபிக் தீனியாத் மக்தப் மதரசாவில் நான்காம் வகுப்பு பயிலும் மாணவர் முஹம்மது அகில். தந்தை பெயர் முஹம்மது அமீர். தற்போது மஸ்ஜிது கட்டுமான பணிகள் நடந்து வரும் நிலையில், அந்த பணிக்காக தான் நீண்ட நாட்களாக உண்டியலில் சேமித்து வைத்திருந்த ரூபாய் 7,250யை மாணவர் முகமது அகில் பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் கொண்டு ஒப்படைத்தார்.
அல்ஹம்துலில்லாஹ்.
இந்த குடும்பத்தினர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னரே இஸ்லாத்தை ஏற்றவர்கள் என்பதும், தங்கள் மகனின் சேமிப்பு தொகையை அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவதற்கு ஊக்கமளித்தது பரக்கத்தான செயலாகும். எல்லாம் வல்ல அல்லாஹ் அந்த சிறுவனின் விசால மனதை பொருந்திக் கொள்வானாக. இதைவிட பன்மடங்கு அபிவிருத்தியை அந்த குடும்பத்திற்கு வழங்குவானாக..
Colachel Azheem

Post a Comment