தங்காலையில் கைப்பற்றப்பட்ட ஐஸ் லொறி குறித்து வெளியான தகவல்கள்
குறித்த நபர் தற்போது பொலிஸ் காவலில் உள்ள நிலையிலேயே இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த போதைப்பொருள் கப்பல் கடல் வழியாக எவ்வாறு தரையிறங்கியது என்பது குறித்த முழு விவரங்களையும் தடுப்பு காவலில் உள்ள நபர் பொலிஸாரிடம் வெளிப்படுத்தியுள்ளார்.
சந்தேக நபரின் கூற்றுப்படி, அவர் தனது தந்தை, இறந்த இரண்டு இளைஞர்கள், லொறியின் உரிமையாளர் மற்றும் தலைமறைவாக இருந்த மற்றொரு நபருடன் 21ஆம் திகதி இரவு 7.00 மணியளவில் சீனிமோதரவில் உள்ள மஹவெல்ல கடற்கரைக்கு வந்துள்ளார்.
போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற இரண்டு கடற்றொழில் படகுகள் இரவு 11.30 மணியளவில் கரையை அடைந்துள்ளன. படகுகளில் ஒன்று கவிழ்ந்து, அதில் இருந்த போதைப்பொருட்கள் கரை ஒதுங்கியுள்ளன.
பின்னர் போதைப்பொருட்கள் லொறிகள் மூலம் சீனிமோதரவில் உள்ள சம்பந்தப்பட்ட வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
வீட்டிற்கு கொண்டு வரப்பட்ட போதைப்பொருள் பொதியை தனது தந்தை மற்றும் இறந்த இரண்டு இளைஞர்களால் பொதி செய்யப்பட்டதாக சந்தேக நபர் ஒப்புக்கொண்டுள்ளார்.
வீட்டின் கதவை பூட்டிய நிலையில் அவர்கள் இந்த வேலையைச் செய்ததாகவும், பின்னர் பொதி செய்யப்பட்ட பொதிகளை சம்பந்தப்பட்ட லொறிகளில் ஏற்றிச் சென்றதாகவும் அவர் மேலும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய மூன்று லொறிகளின் மூன்று உரிமையாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒரு சந்தேக நபரை கல்கிஸை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய பின்னர் செப்டம்பர் 29ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அங்கு 284 கிலோ 414 கிராம் ஹெரோயின் மற்றும் 420 கிலோ 760 கிராம் ஐஸ் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.
பொலிஸாரின் கூற்றுப்படி, கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த எடை 705 கிலோகிராம் 174 கிராம் என்பதுடன், இதன் பெறுமதி ரூ.9,888 மில்லியன் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment